செம்பரம்பாக்கம் அருகே உள்ள கல்குவாரி நிரம்பியது. கருப்பு நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனா்.
செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வறட்சி அடைந்ததால் கடந்த காலங்களில் சென்னை மக்களின் தேவைக்காக கல்குவாரியில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதேபோல் கல்குவாரி ஒரு குட்டி நீர்தேக்கம் போல் செயல்பட்டு, கல்குவாரியில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் எடுத்து செல்லப்பட்டு வந்தது. அதேபோல் பூந்தமல்லி, நசரத்பேட்டை, மலையம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யக்கூடிய மழை நீரால் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கால்வாய் மூலம் கல் குவாரிக்கு மழை நீரை சேகரிக்க ராட்சத கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த ஒரு சில தினங்களாக பெய்த கனமழையால் கல்குவாரிக்கு நீர்வரத்து அதிகரித்து முழுவதுமாக நிரம்பி உள்ளது. மழைநீர் வரவேண்டிய கால்வாய்களில் கழிவுநீர் கலந்து வந்ததால், கல்குவாரி முழுவதுமாக மாசடைந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். கல்குவாரி கருப்பு நிறமாக மாறியுள்ளது. குறிப்பாக தற்போது பெய்த மழையில் கழிவு நீரும் கலந்து வந்ததால் கல்குவாரி கருப்பு நிறமாக காட்சியளிக்கிறது. கல்குவாரிக்கு வரும் கால்வாய்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
கல்குவாரியை பார்வையிட்ட முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி கல்குவாரியில் கழிவு நீர் கலப்பதால், மாசடைந்து உள்ளதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். உடனடியாக அரசு அதிகாரிகள் கல்குவாரியில் கலக்கப்படும் கழிவு நீரை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அதேபோல் கல்குவாரி நிரம்பி கொள்ளச் சேரி பகுதிக்குள் புகுந்துவிடுவதால், மழைக்காலங்களில் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கல்குவாரியில் உள்ள நீர்களை குறைக்க கலங்கள் அமைக்க வேண்டும். கணிசமான நீரை தேக்கி வைக்க தடுப்புகளை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
தேஜஸ்வியால் முதல்வராகவோ, ராகுல் காந்தியால் பிரதமராகவோ ஆக முடியாது – அமித்ஷா பேச்சு..



