spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅம்பத்தூர் ,சி.டி.எச் சாலையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள்…கண்டுகொள்ளாத மாநகராட்சி…

அம்பத்தூர் ,சி.டி.எச் சாலையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள்…கண்டுகொள்ளாத மாநகராட்சி…

-

- Advertisement -

அம்பத்தூர் தொழிற்பேட்டை,சி.டி.எச் சாலையில் திறந்து கிடக்கும் பாதாளச் சாக்கடை பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துகுள்ளாகியது. உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அம்பத்தூர் ,சி.டி.எச் சாலையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள்…கண்டுகொள்ளாத மாநகராட்சி…வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சென்னையில் உள்ள பிரதான சாலைகள் சேதமடைந்து வருகின்றன. குறிப்பாக பாடி அம்பத்தூரிடையே சி.டி.எச் சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக, அம்பத்தூர் தொழிற்பேட்டை- பாடியிடையே மழை நீர் பாதாளச் சாக்கடை மூடி திறந்தபடி காணப்படுவதால் அவ்வழியாக  செல்லும் வாகனங்கள் கால்வாயில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றன.

மழை நீர் நிரம்பி கால்வாய் திறந்து இருக்கிறதா அல்லது மூடி இருக்கிறதா என்பது கூட தெரியாததால் அவ்வழியாக வரும் வாகனங்கள் அதில் சிக்கி விழுந்து வருகின்றன. அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அதில் சிக்கி விபத்து உள்ளானது எனவே உடனடியாக கால்வாயை மூட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மாற்றுத்திறனாளி ரசிகரிடம் அஜித் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ!

we-r-hiring

MUST READ