spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை...சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை…சவரன் எவ்வளவு தெரியுமா?

-

- Advertisement -

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த நிலையில், நேற்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.56,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.240 குறைந்துள்ளது.

we-r-hiring

அட்சய திருதியை - தங்கம் விலை 2-வது முறை உயர்வு

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400-க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 சரிந்து ரூ.7,050-க்கு வர்த்தகமாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் தொடர்ந்து 5வது நாளாக மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.101க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

MUST READ