சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கட்டடத்தில் திடீர் அதிர்வு காணப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலையில் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தலைமைச் செயலகத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியுள்ளது.
பணியில் இருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் தளத்தின் தரையில் இருந்த டைல்ஸில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, பரவிய வதந்தியால் ஊழியர்கள் வெளியேறியதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
அச்சமின்றி உள்ளே செல்லுமாறு ஊழியர்களை காவல்துறையினர் அறிவுறுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
14 வருடத்திற்கு முந்தைய பழைய டைல்ஸ் என்பதால் விரிசல் ஏற்பட்டுள்ளது பழைய டைல்ஸ்களுக்கு பதில் விரைவில் புதிய டைல்ஸ்கள் மாற்றப்படும், ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை ஏர் கிராக் காரணமாக டைல்ஸில் விரிசல்.” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.