Homeசெய்திகள்சென்னை9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை! 

9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை! 

-

மன அழுத்தம் காரணமாக 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

தனியார் கட்டுமான நிர்வாக மேளாளர் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை. மன அழுத்தம் காரணமாக மெசேஜ் அனுப்பிய நிலையில் குடும்பத்தினர் சோகம்!

சென்னை பள்ளிக்கரணை 200 அடி சாலையில் உள்ள 13 அடுக்குகள் கொண்ட தனியார் அடுக்கு மாடி குடியிப்பில் 9வது தளத்தில் வசிப்பவர் சம்பத்(36), ரமணியம் என்னும் கட்டுமான நிறுவனத்தில் மேளாளராக பணி செய்து வந்தார், இவர் மனைவி சுகன்யா, ஆர்மான்(5) ஆதிரன்(9 மாதம் ) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த 10 நாட்களாக சோர்வாக அவர் மிக சோர்வாக காணப்பட்ட நிலையில் உறவினர்கள், நண்பர்கள் என மெசேஜ் அனுப்பி இன்று அவர் வீட்டின் பால்கனியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் ஆல்பின்ராஜ் தலைமையில் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுகாக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, மேலும் அவரின் செல்போனை கைப்பற்றி விராரனை செய்து வருகிறார்கள்.

MUST READ