சென்னை தண்டையார்பேட்டையில் செலோடேப் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து.மல மலவென பரவி வான் உயரத்திற்கு எறிந்த தீயை 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்த தீயணைப்பு துறையினர். இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் இல்லாமல் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டை மேம்பாலத்தலத்தின் கீழே உள்ள வைத்தியநாதன் தெருவில் செயல்பட்டு வந்த செல்லோ டேப் தயாரிக்கும் குடோனில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பெயின்டிற்கு பயன்படுத்தும் தின்னர் மற்றும் டேப்பிற்கு பயன்படுத்தப்படும் பிஸின்கள் உள்ளே இருந்ததால் தீ மல மலவென பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த தண்டையார்பேட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீ பெரிய அளவில் கொழுந்து விட்டு வானோக்கி எரிந்ததால் உடனடியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
அசோக் நகர், கொருக்குப்பேட்டை, பூக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் 5- க்கும் மேற்பட்ட சென்னை குடிநீர் வாரியத்தின் வாகனமும் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் மாற்றப்பட்டு அதில் இருந்து கொழுந்துவிட்டு எரிந்த தீயின் மீது தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது.
சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
சைலேஷ் மற்றும் சுபாஷ் ஆகியோருக்கு சொந்தமான இந்த குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்வாய்ப்பாக இரவு நேரம் என்பதால் குடோனில் யாரும் இல்லாமல் இருந்தனர் இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.
செலோடேப் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து.மல மலவென பரவி வான் உயரத்திற்கு எறிந்த தீயை 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்த தீயணைப்பு துறையினர். இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் இல்லாமல் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டை மேம்பாலத்தலத்தின் கீழே உள்ள வைத்தியநாதன் தெருவில் செயல்பட்டு வந்த செல்லோ டேப் தயாரிக்கும் குடோனில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பெயின்டிற்கு பயன்படுத்தும் தின்னர் மற்றும் டேப்பிற்கு பயன்படுத்தப்படும் பிஸின்கள் உள்ளே இருந்ததால் தீ மல மலவென பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த தண்டையார்பேட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.