வித்தியாசமான கேக்கை பரிசாகக் கொண்டு வந்து அப்பாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகள்
சென்னை அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் பணி நிறைவு பாராட்டு விழாவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த வித்தியாசமான கேக்கை வெட்டி கொண்டாடினர்.

தமிழ்நாடு காவல்துறையில் 1986 ல் சென்னை மாநகர காவல் துறையில் காவலராகப் பணிக்கு சேர்ந்து தலைமை காவலர், உதவி ஆய்வாளர் என பதவி உயர்வு பெற்று. சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையில் 2005 முதல் பணியாற்றி கடந்த மே 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
கடந்த 38 ஆண்டு காலம் காவல் துறையில் சிறு தண்டனை இல்லாமல் கடைசி வரை சிறந்த முறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 31 ஆம் தேதி, அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலைய அனைத்து காவலர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தினர்.. அதில் காவல் துறை உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

அதில் 38 ஆண்டு காவல் துறை நிறைவை கேக் வெட்டி சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக வித்தியாசமான கேக்கை போக்குவரத்து ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியின் இளைய மகளான தீப நிவாஷினி ஏற்பாடு செய்த கேக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அந்த கேக்கில் மாநகர காவல் லட்சனை(லோகோ), போக்குவரத்து காவல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பாதுகாப்பு விதி முறைகள், சாதனங்கள், துப்பாக்கி தோட்டாக்கள், பெல்ட்,தொப்பி, மது அருந்தி வாகனம் ஓட்டுவதை சோதிக்கும் (ப்ரீத் அனலைஸ் கருவி, காவல் துறை லத்தி, போக்குவரத்து விதிமீறல் அபராத ரசீது ஆகியவை சாலை விதிமுறைகள் பின்பற்ற வைக்கப்படும் கோன் ஆகிய அனைத்தும் கேக்கில் இடம் பெற்றுள்ளது. காவல் ஆய்வாளரின் பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு பாராட்ட வந்த உயர் அதிகாரிகள் அந்த கேக்கை பார்த்து அசந்து போயினர்.

குறிப்பாக ஆவடி மாநகர் காவல் போக்குவரத்து துணை ஆணையாளர் ஜெயலட்சுமி IPS கேக்கை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். ஓய்வுப் பெற்ற ஆய்வாளரின் இளைய மகளான தீப நிவாஷினியை பாராட்டினர்.