சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து 56,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த சில மாதங்களாக ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, சவரன் ரூ. 59 ஆயிரத்தை நெறுங்கியது. இதனால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 440 குறைந்து ரூ.57 ஆயிரத்து 760-க்கு விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக 1,080 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு 135 குறைந்து 7,085 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமிற்கு 2 ரூபாய் குறைந்து, கிராம் ரூ.100-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 2 ஆயிரம் குறைந்து, ஒரு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.