11 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது
சென்னை டிபிஐ வளாகத்தில் 11 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனனர்.
சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் பணி நிரந்தரம் சம வேலை சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடை நிலை ஆசிரியர்கள் இன்றுகாலை காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். பணி நியமணம் மற்றும் மறுநியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் சமவேளைக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமென இடைநிலை ஆசிரியர்கள் எட்டு நாட்களாகவும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் 11 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் முதன்மைச் செயலாளருடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது பேச்சு வார்த்தை உடன்பாடு எட்டபடாத நிலையில் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே காவல்துறையினர் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை கைது செய்து சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் சமுதாய நலக்கூடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் காவல்துறை தங்களின் நியாமன கோரிக்கைகளை புரிந்து கொள்ளாமலே கைது செய்து வருவதாகவும், அற வழியில் போராடிய எங்களை காவல்துறையைக் கொண்டு வலு கட்டாயமாக கைது செய்து வருவதாகவும் ஆசிரியர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.


