சோழவரம் அருகே நீர்விழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் கல்லூரி மாணவர் ஒருவர் பலி. ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சென்னையில் இருந்து 6 இருசக்கர வாகனங்களில் 12 இளைஞர்கள் தடா நீர்விழ்ச்சிக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை மேடவாகத்தை சேர்ந்த இளைஞர்கள் 12 பேர் 6 இருசக்கர வாகனங்களில் ஆந்திர மாநிலம் தடா நீர்விழ்ச்சிக்கு சுற்றுலா சென்றனர். சோழவரம் அடுத்த காரனோடையில் இருசக்கர வாகனம் ஒன்று அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணித்த கோபிநாத் (21) என்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கிறிஸ்டோபர் சாலமன் 20 என்ற கல்லூரி மாணவர் படுகாயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


