Homeசெய்திகள்சென்னைகோவிலில் படுத்து உறங்கிய திருடன் - வியாசர்பாடி

கோவிலில் படுத்து உறங்கிய திருடன் – வியாசர்பாடி

-

- Advertisement -

சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் கோவிலில் திருட வந்த திருடன் பீராவை திறக்க முடியாமல் கோவிலிலே படுத்து உறங்கியதால் வசமாக சிக்கினார்.

வியாசர்பாடி சர்மா நகரில் 50 ஆண்டுகள் பழமையான வெற்றி விநாயகர் ஆலயத்தில் நேற்று இரவு திருடன் உள்ளே புகுந்துள்ளார். அங்கு பீரோவை திறக்கும் முற்பட்ட பொழுது பீரோ திறக்க முடியாததால் மற்றொரு பீரோவில் சுவாமி துணிகளை கலைத்து தேடி உள்ளார்.

we-r-hiring

பின்பு கலைப்பானதால் கோவிலில் படுத்து உறங்கி உள்ளார். இதனை அடுத்து காலையில் கோவில் குருக்கள் கோவிலை திறந்து பார்த்த பொழுது மர்ம நபர் படுத்திருப்பது தெரியவந்தது.

கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து விசாரித்ததில் கோவிலில் திருட வந்தது தெரிய வந்தது.

பின்னர், எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர்.

MUST READ