அமைந்தகரையில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் நடத்திய கண்ணன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு.

கண்ணன் என்பவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு. போலீசார் விசாரணையில் கண்ணன் சட்டவிரோதமாக பார் நடத்தி வருபவர் என தெரியவந்துள்ளது.தாக்குதல் நடத்தியவருக்கு போலீஸ் வலைவீச்சு.

அமைந்தகரை என்எஸ்கே நகர் பேருந்து போக்குவரத்து காவலர் முத்துச் செல்வம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது. நேற்று இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். என் எஸ் கே நகர் பேருந்து நிறுத்தம் அருகே முதியவர் ஒருவர் குடிபோதையில் அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். முதியவரை அங்கிருந்து நகர சொன்ன போது அவர் கேட்கவில்லை.
இது தொடர்பாக முத்து செல்வம் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்க செல்போனை எடுத்தார். அப்போது ஒரு காரில் இருந்து இறங்கி வந்த கண்ணன் என்பவர் காவலர் முத்து செல்வத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். போலீஸ் என்றால் பெரிய இதுவா என அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி விட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக காவலர் முத்து செல்வம் அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் கண்ணன் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 ஆபாசமாக பேசுதல், 353 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், 323 காயங்களை விளைவித்தல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தேடி வருகின்றனர். கண்ணன் அந்த பகுதியில் சட்டவிரோதமாக நடத்துவதாக போலீசார் விசாரணையில் வெளிவந்துள்ளது.
