Homeசெய்திகள்சென்னைகடனை திருப்பி கேட்பதற்காக வீடு புகுந்து தாக்கிய திருநங்கை

கடனை திருப்பி கேட்பதற்காக வீடு புகுந்து தாக்கிய திருநங்கை

-

கடனை திருப்பி கேட்பதற்காக வீடு புகுந்து தாக்கிய திருநங்கை

சென்னையில் கொடுத்த கடனை திருப்பி கேட்பதற்காக வீடு புகுந்து தாக்கி பணம், நகைகளையும், அபகரித்துச் சென்ற திருநங்கைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடனை திருப்பி கேட்பதற்காக வீடு புகுந்து தாக்கிய திருநங்கைசென்னை கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த 40 வயதானவர் முருகன். இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரி ஆக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு அயனாவரம் பகுதியை சேர்ந்த திருநங்கையான கோட்டி என்கின்ற தேவிக்கு 1 லட்சம் ரூபாய் கடனாக வழங்கியுள்ளார். கடனைப் பெற்ற கோட்டி ஓராண்டு காலமாக பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்ற வாரம் கோட்டியிடம் வாங்கிய கடனை திருப்பி கேட்ட பொழுது தகாத வார்த்தைகளால் திட்டி, முருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருநங்கை கோட்டி, பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் ஆண்கள் என 20க்கும் மேற்பட்டோருடன் முருகனின் வீட்டிற்கு சென்று, வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தி, முருகனின் மகள்களை தாக்கியுள்ளனர். இதில் முருகன் வீட்டில் இருந்த நகை மற்றும் சுமார் ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் திருடி சென்றதாக திருநங்கை கோட்டி மீது குற்றம் சாட்டுகின்றனர்.

இச்சம்பவத்தை தடுக்க வந்த, முருகனின் உறவினரான திருநங்கை அனிதா என்பவரையும் தாக்கிய கோட்டி, இது குறித்து காவல்துறைக்கு தகவல் அறிந்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்து காவலர்களின் முன்னிலையிலே முருகனின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ