spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?

-

- Advertisement -

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே இன்று காலை ஐந்தரை மணி அளவில் வந்து நின்றது. மீண்டும் அந்த ரயில் புறப்படும் போது பன்னிரெண்டு பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயிலில் முதல் நான்கு பெட்டிகளின் இணைப்பு கேபிள் அறுந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?
ரயில்

தொடர்ந்து இணைப்பு கேபிள் அறுந்ததை கண்டறிந்த ரயில் ஓட்டுநர் ரயிலை சாதுரியமாக ரயிலை நிறுத்தியதால் பின்னால் கழன்ற நான்கு பெட்டிகளில் பயணித்த பயணிகளுக்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே கழன்ற ரயில் இணைப்புகளை சரி செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் காலையிலே தொடர்ந்து ஈடுபட்டனர்.

we-r-hiring
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?
ரயில்

இதனால் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில் இரண்டாவது வழித்தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன் காரணமாக சுமார் இரண்டு மணி நேரமாக அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் ரயிலுக்காக நீண்ட நேரமாக காத்து கொண்டு இருந்தனர். கோடம்பாக்கம், கிண்டி , பல்லாவரம் , தாம்பரம் , பெருங்களத்தூர் என பல்வேறு ரயில் நிலையங்களில் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருந்ததால் செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் நான்காம் வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

நடைமேடை நான்கி ல் வரக்கூடிய விரைவு ரயில்களில் அனைத்து பயணிகளையும் செல்ல ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. மறு மார்க்கத்தில் செங்கல்பட்டு முதல் கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டது.

கழன்ற  ரயில் பெட்டிகளை தனித் தனியாக தாம்பரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், ரயில் சேவை பாதிப்படைந்த ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணிக்காக தாம்பரத்திற்கு எடுத்து செல்லப்பட்டதை யடுத்து தற்போது கிட்டத்தட்ட சுமார் இரண்டு மணி முப்பது  நிமிடத்திற்கு பிறகு கடற்கரை,  தாம்பரம் செல்லக்கூடிய ரயில் சேவை 2வது நடைமேடையில் மீண்டும் வழக்கம் போல் தொடங்கியது.

MUST READ