கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய World Of பராசக்தி கண்காட்சி நாளை மறுநாள் 28 ஆம் தேதி வரை செயல்படும் என அறிவித்து இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி பட குழுவினரால் 1960 காலகட்டத்தில் இருந்த வீடு, டென்ட் கொட்டாய், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்கள், ரயில் நிலையம், காவல் நிலையம், படத்தில் பயன்படுத்தப்பட்ட கார் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செட் அமைத்து World of பராசக்தி என்ற பெயரில் கண்காட்சி கடந்த டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கப்பட்டது.
மூன்று நாட்கள் திட்டமிடப்பட்டு, மக்களுக்கு அனுமதி இலவசம் என பட குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் வரவேற்பினால் டிசம்பர் 25ஆம் தேதி இந்த கண்காட்சி நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் மூன்று நாட்கள் நீட்டித்து, வருகின்ற 28 ஆம் தேதி வரை கண்காட்சி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் கைக்கூலி… தவெகவின் பெண் நிா்வாகி அஜிதா எடுத்த விபரீத முடிவு!!



