Homeசெய்திகள்சென்னைசென்னையில் ரயில் மோதி இளைஞர் பலி

சென்னையில் ரயில் மோதி இளைஞர் பலி

-

- Advertisement -

சென்னை திருவொற்றியூர், ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் 3 வது தெருவைச் சேர்ந்த 25 வயதுடைய ராகேஷ் டிப்ளமா படித்து விட்டு திருவெற்றியூர் ராயல் என்ஃபீல்ட் இருசக்கர வாகன தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

ராகேஷ் பணி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற போது திருவொற்றியூர்  ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது  ரயில் மோதியதில் இடது  கால் துண்டாகி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

we-r-hiring

திருவொற்றியூரில் ரயில்வே மாஸ்டர் கிரிதரன் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ