இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பாலிவுட்டிலும் சென்று ஜவான் திரைப்படத்தை இயக்கிய மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் இயக்குனர் அட்லீ தயாரிப்பாளராகவும் உருவெடுத்து தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவரது தயாரிப்பில் உருவாகி இருக்கும் பேபி ஜான் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. மேலும் விஜய் சேதுபதியின் புதிய படத்தை, இயக்குனர் அட்லீ தயாரிக்க உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வரும் நிலையில் இவர் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தமிழில் ட்ரெயின், காந்தி டாக்ஸ், ஏஸ் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் சில சில படங்களிலும் கமிட்டாகி இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தான் விஜய் சேதுபதி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. இந்நிலையில் இந்த புதிய படத்தை இயக்குனர் அட்லீ தயாரிக்க உள்ளதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அட்லீ மற்றும் முரத் கேடானி ஆகியோர் இணைந்து அறிவித்திருக்கிறார்கள். எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.