Homeசெய்திகள்சினிமாகோவாவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி!

கோவாவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி!

-

- Advertisement -

நடிகர் ரஜினி, கோவாவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.கோவாவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தில் பல டாப் நடிகர்கள் இணைந்து இருப்பதாக ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. கோவாவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி!அந்த வகையில் ஏற்கனவே இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே. சூர்யா, சந்தானம், வித்யா பாலன், பகத் பாசில் ஆகியோரும் நடிப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவாவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி!சமீபத்தில் கோவாவில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், நடிகர் ரஜினி கோவா படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர்பான தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ