நடிகர் சூரியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவருடைய நடிப்பில் வெளியான ‘கருடன்’, ‘மாமன்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நடிகர் சூரி, தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து பெயரையும் புகழையும் பெற்று வருகிறார். அதாவது ஆக்ஷன், சென்டிமென்ட், ரொமான்ஸ் என அனைத்திலும் தூள் கிளப்பி ரசிகர்கள் மனதில் ஒரு ஹீரோவாக இடம் பிடித்து விட்டார். அடுத்தது சூரி நடிப்பில் ‘மண்டாடி’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
இது தவிர இன்னும் சில படங்களில் கமிட் ஆகி வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்று நேற்று நாளை, அயலான் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம் சூரி. இது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான மற்ற தகவல்களும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.