என்னால் கார்த்தி மாதிரி நடிக்க முடியாது என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. சூர்யாவின் 44 வது படமான இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது. கோடை விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா, தன்னால் கார்த்தி மாதிரி நடிக்க முடியாது எனக் கூறியுள்ளார். அதன்படி அவர், “நான் பெஸ்ட் ஆக்டர் எல்லாம் இல்ல. நான் ஒரு ஓவர் ஆக்டிங் ஆக்டர் என்று நிறைய பேர் சொல்றாங்க. ஆனால் நான் பாலா அண்ணன் சொன்னத தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அவர் கேமரா முன்னாடி உண்மையா இருந்திடு என்று சொல்வார். ஏதாச்சு ஒரு சீன்ல நீ எமோஷனலா விலகி இருந்து, அடுத்த டேக் போலாம் என்று நான் சொன்னா கூட என்னை கூப்பிட்டு நீ சொன்னா நான் சந்தோஷப்படுவேன் என்று சொல்வார் பாலா அண்ணன் சொல்வார். அதனாலதான் நான் என்னுடைய பெஸ்ட் தான் எப்போதும் கொடுப்பேன். சில விஷயங்கள் என்னால பண்ண முடியாது. அதெல்லாம் நான் கையை தூக்கி என்னால முடியாது என்று ஒத்துப்பேன். மெய்யழகன் மாதிரி படங்களில் என்னால கார்த்தி மாதிரி நடிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.