‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் அணைத்துகட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியீட்டிற்க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.


இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கும் புதிய படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் ‘ராமநாதன்’ என்னும் முதன்மை காதபாத்திரத்தில் நடிக்கும் பாரதிராஜா அவர்களின் குரல் பதிவு நிறைவு பெற்றுள்ளது. அவர் தந்த ஒத்துழைப்பை எந்நாளும் மறவேன். இம்மேதையுடன் பணிபுரிந்த நாட்கள் என் வாழ்வின் மிகச்சிறந்த நாட்கள் என இயக்குனர் தங்கர் பச்சன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சிறுகதை ஒன்றை தழுவி உருவாக்கப்படும் இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.


