மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் 23 வது படமாக உருவாகியிருந்த ‘மதராஸி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். முருகதாஸ் இதனை இயக்கி இருந்தார். அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக மிரட்டி இருந்தார். ஏ.ஆர். முருகதாஸும் தனது பழைய ஸ்டைலை கையில் எடுத்து தரமான கம்பேக் கொடுத்து இருந்தார். இருப்பினும் இந்த படத்தில் திரைக்கதை வலுவாக இல்லாத காரணத்தால் இந்த படம் நாளுக்கு நாள் வசூலில் சரிவை சந்தித்தது. அந்த வகையில் இன்னும் ரூ.100 கோடியை நெருங்க திணறி வருகிறது. இதற்கிடையில் மலையாளத்தில் வெளியான ‘லோகா’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் ‘மதராஸி’ படத்திற்கு வரும் கூட்டமும் குறைய தொடங்கின. இந்நிலையில் இப்படம் வருகின்ற அக்டோபர் 3ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.