spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா14 ஆண்டுகளை நிறைவு செய்த விண்ணை தாண்டி வருவாயா!

14 ஆண்டுகளை நிறைவு செய்த விண்ணை தாண்டி வருவாயா!

-

- Advertisement -

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தனது ஒவ்வொரு காதல் படங்களையும் தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார். அதன்படி கடந்த 2010 கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா.14 ஆண்டுகளை நிறைவு செய்த விண்ணை தாண்டி வருவாயா! இந்த படத்தில் சிம்பு, திரிஷா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் சமந்தா நாக சைதன்யா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சிம்பு கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷா ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கார்த்திக், ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரங்கள் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகிறது. அந்த வகையில் இப்படம் காதலை வேறொரு பரிமாணத்தில் காட்டியிருந்த ஒரு படைப்பு என்றே சொல்லலாம். காதலர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆகவும் சிங்கிளாக இருப்பவர்களுக்கு மோட்டிவேஷனாகவும் இப்படம் இருந்தது. 14 ஆண்டுகளை நிறைவு செய்த விண்ணை தாண்டி வருவாயா!அதுமட்டுமில்லாமல் “உலகத்துல எவ்வளவு பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெசி உன்ன லவ் பண்றேன்” எனும் வசனம் காலத்தால் அழியாத வசனம் ஆகும். மேலும் ஏ ஆர் ரகுமானின் இசை படத்திற்கு பெரிய அளவில் பலம் அளித்திருந்தது. அதன்படி படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்நிலையில் இந்த படம் 14 வருடங்களை இன்றுடன் (பிப்ரவரி 26) நிறைவு செய்துள்ளது.

MUST READ