- Advertisement -
2023-ம் ஆண்டு சினிமாவை பொறுத்தவரை சில பல சோதனைகளுடனும், சாதனைகளுடன் கடந்து போனது. கொரோனாவுக்கு பிறகு கடந்த 4 வருடங்களில் வெளியான சில முக்கிய படங்கள் வழக்கமான வசூலைக் காட்டிலும் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்து வருகின்றன. 2022 ம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் 500 கோடி ரூபாய் வசூலித்தது. இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூலை ஈட்டியது.

இதுவ தவிர பீஸ்ட், வலிமை, திருச்சிற்றம்பலம், டான், சர்தார், லவ் டுடே ஆகிய நேரடித் தமிழ் படங்களும், ஆர்.ஆர்.ஆர். கேஜிஎப் 2 ஆகிய டப்பிங் படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து மொத்தமாக அந்த ஆண்டில் ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்தன. கடந்த 2023-ம ஆண்டில் ஜெயிலர், லியோ ஆகிய இரண்டு படங்களும ஆயிரத்து 200 கோடி வசூலை கடந்து புதிய சாதனை படைத்தன. ஒரே ஆண்டில் இரண்டு தமிழ் படங்கள் 600 கோடி வசூலை பெற்ற முத்திரை பதித்தன. அது மட்டுமல்லாது பொன்னியின் செல்வன் 2 மற்றும் வாரிசு ஆகிய படங்களும் 300 கோடி ரூபாய் வசூல் குவித்தன.




