HomeBreaking News'3BHK' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!

‘3BHK’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!

-

- Advertisement -

3BHK படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.'3BHK' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சித்தார்த் தற்போது 3BHK எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் சித்தார்த்தின் 40வது படமாகும். இதில் சரத்குமார், தேவயானி ஆகியோர் சித்தார்த்தின் அப்பா – அம்மாவாக நடித்துள்ளனர். மேலும் மீதா ரகுநாத் சித்தார்த்தின் தங்கையாக நடிக்க சைத்ரா ஆச்சர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்க அமரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது வருகின்ற ஜூலை 4-ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டைட்டில் டீசரும், அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளும் ஆகும் எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை அனந்து, கல்யாணி நாயர், உத்ரா உன்னிகிருஷ்ணன், அம்ரித் ராம்நாத் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஸ்ரீ கணேஷ் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ