நகைச்சுவை நடிகர் யோகி பாபு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ரஜினி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பது மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் வானவன்,மேகி, பூமர் அங்கிள் போன்ற படங்களிலும் சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.
கடைசியாக யோகி பாபு நடிப்பில் லக்கி மேன் திரைப்படமும் அதைத் தொடர்ந்து குய்கோ படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில் யோகி பாபு, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய சிம்பு தேவன் இயக்கத்தில் போட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் யோகி பாபு உடன் கௌரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிப்ரான் இதற்கு இமையமைதுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக படத்தின் டைட்டில் லுக் வெளியான நிலையில் இன்று (டிசம்பர் 16) படத்தின் டீஸர், துபாயில் மிக பிரம்மாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது. பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆகும் யோகி பாபுவின் போட் படத்தை 5 நடிகர்கள் வெளியிட இருக்கின்றனர். தமிழில் விஜய் சேதுபதி , மலையாளத்தில் பிரித்விராஜ், இந்தியில் ஆமீர்கான், தெலுங்கில் நாக சைதன்யா, கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் வெளியிட உள்ளனர். இது குறித்து அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.