- Advertisement -
காதல், கமர்ஷியல், பெண்ணியம், பீல் குட் என மசாலா கலவையாக உருவாகியுள்ள 4 திரைப்படங்கள் வரும் டிசம்பர் 15-ம் தேதி ஒரே நாளில் வௌியாக உள்ளன.
நடிகர் சரத்குமார் அண்மையில் அசோக் செல்வனுடன் இணைந்து போர்த்தொழில் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அமிதாஷூடன் பரம்பொருள் என்ற படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றன. அடுத்ததாக சசிகுமாருடன் நா நா என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். சலீம், சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய என் வி நிர்மல் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். கல்பதரு நிறுவனம் நா நா படத்தை தயாரித்துள்ளது. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
போர்த்தொழில் திரைப்படத்தை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள திரைப்படம் சபா நாயகன். சி.எஸ்.கார்த்திகேயன் படத்தை இயக்கி உள்ளார். மேகா ஆகாஷ், கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சாந்தினி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. காதல் மற்றும் நட்பை மையப்படுத்தி உருவாகியுள்ள சபாநாயகன் திரைப்படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி திரைக்கு வருகிறது. போர்த்தொழில் வெற்றிக்கு பிறகு அசோக் செல்வன் நடித்துள்ள படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
