spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த 6 படங்கள் 15 நாட்களில் ரிலீஸ்

நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த 6 படங்கள் 15 நாட்களில் ரிலீஸ்

-

- Advertisement -

2022 ஆண்டு இறுதியில் வெளியாகும் நயன்தாரா, த்ரிஷா, சன்னி லியோன், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்கள்!

நடப்பாண்டின் இறுதியில் முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்கள் வெளியாகிறது டிசம்பர் 22ஆம் தேதி 2 படங்களும், வரும் 30-ம் தேதி 4 என மொத்தம் 6 முக்கிய திரைப்படங்கள் திரைக்கு வருகிறது.

we-r-hiring

அதில் 22 ஆம் தேதி நடிகர் விஷாலின் ‘லத்தி’, நயன்தாராவின் ‘கனெக்ட்’ அதற்கு அடுத்த வாரம் டிசம்பர் 30 ஆம் தேதி த்ரிஷாவின் ‘ராங்கி’, சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’, விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ மற்றும் கோவை சரளாவின் ‘செம்பி’ ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.

அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா மற்றும் பலர் நடிப்பில் ஐந்து மொழிகளில் ‘லத்தி’22 ஆம் தேதி வெளியாகிறது. அதே நாளில் மாயா பட இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் நடிகை நயன்தாரா, சத்யராஜ், வினய், அனுப்பம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள ‘கனெக்ட்’ வெளியகிறது.

நடிகர் விஷாலின் 'லத்தி', நயன்தாராவின் 'கனெக்ட்' அதற்கு அடுத்த வாரம் டிசம்பர் 30 ஆம் தேதி த்ரிஷாவின் 'ராங்கி', சன்னி லியோனின் 'ஓ மை கோஸ்ட்', விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' மற்றும் கோவை சரளாவின் 'செம்பி'
த்ரிஷாவின் ‘ராங்கி’,

ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் ‘எங்கேயும் எப்போதும்’ எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ராங்கி திரைப்படம் நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ளது. த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இத்திரைப்படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. ராங்கி படத்தை தொடர்ந்து சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘நாடு’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.

அதே போல நீண்ட நாட்களாக தள்ளிப்போய் கொண்டிருந்த விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ திரைப்படமும் வரும் 30-ம் தேதி வெளிவர இருக்கிறது. பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி உள்பட ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, சோனு சூட், ராதாரவி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

சன்னி லியோன் முதல் முறையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படமும் 30-ம் தேதி வெளியாக உள்ளது. ‘சிந்தனை செய்’ பட இயக்குநர் யுவன் இயக்கும் இப்படத்தில் சதீஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா நடிக்கும் ‘செம்பி’ படமும் வரும் 30-ம் தேதி வெளிவர இருக்கிறது.

MUST READ