நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
தாய் மண்ணிற்கு வணக்கம்#IndependenceDay#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21 #SK21JoiningForces #RKFIProductionNo_51 @ikamalhaasan@Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @SonyPicsIndia @sonypicsfilmsin @turmericmediaTM… pic.twitter.com/2ZsifwaMEt
— Raaj Kamal Films International (@RKFI) August 15, 2023
இந்நிலையில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “200 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்து போராடி பெற்ற இந்திய விடுதலையை போற்றுவோம். ஒவ்வொரு நாளும் இரவு, பகல், வெயில், பனி பாராமல் இமயம் முதல் குமரி வரை கம்பீரமாய் நின்று நம்மை இன்று வரை சுதந்திர காற்றை சுவாசிக்க வைக்கும் ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். தாய் மண்ணிற்கு வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.


