Homeசெய்திகள்சினிமா7ஜி ரெயின்போ காலணி 2 படப்பிடிப்பு தொடக்கம்

7ஜி ரெயின்போ காலணி 2 படப்பிடிப்பு தொடக்கம்

-

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செவன் ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் கதை களத்தில் உருவான படம் 90ஸ் ஹிட்ஸ் களின் பேவரைட் படங்களில் ஒன்றாகும்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளார். இது குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த படத்தில் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க உள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தொடங்கியுள்ளது. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் செல்வராகவன், ரவிகிருஷ்ணா நடிக்கும் சில காட்சிகளைப் படமாக்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

MUST READ