96 பாகம் 2 படத்தின் ஹீரோ மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் 96 எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பிரேம்குமார் இயக்கியிருந்தார். மென்மையான காதல் கதையில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்தது இதன் அடுத்த பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இயக்குனர் பிரேம்குமார், 96 பாகம் 2 படத்தை இயக்கப் போவதாகவும், இதனை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கப் போவதாகவும் சமீப காலமாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. எனவே 2025 ஜூன் மாதத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் 96 பாகம் 2 படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஆர்வம் காட்டவில்லையாம். அதாவது விஜய் சேதுபதி, திரிஷாவை தேடி சிங்கப்பூர் செல்வது தான் இந்த படத்தின் கதையாம். பிரேம்குமார் இதை விஜய் சேதுபதியிடம் விவரித்தபோது அவர், இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து எந்த ஆர்வமும் காட்டவில்லையாம்.
எனவே பிரேம்குமார், விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதனை அணுகியதாக சொல்லப்படுகிறது. அவருக்கும் இந்த கதை பிடித்துப் போய்விட்டதாம். ஆனால் 96 திரைப்படம் என்றாலே அது விஜய் சேதுபதி – திரிஷா தான். இப்படி இருக்கும் பட்சத்தில் 96 பாகம் 2இல் வேறொரு ஹீரோ நடித்தால் அது ரசிகர்களை எப்படி சென்றடையும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.