சூர்யா 45 படத்தில் பிரபல நடிகர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே வெளியாகி படத்தில் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் ரப்பர் பந்து படத்தில் நடித்து பெயர் பெற்ற சுவாசிகாவும் இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது இந்த படத்தில் பிரபல நடிகர் நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளாராம்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு கோயமுத்தூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று (நவம்பர் 30) முதல் நட்டி நடராஜின் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.


