பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர், லப்பர் பந்து படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் நடிப்பில் லப்பர் பந்து எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்திருந்தார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ஈகோ கிளாஸ் சம்பந்தமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளைப் பெற்ற இந்த படம் இன்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சுவாசிகாவிற்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஒன்றில், நடிகர் ஷாருக்கான், லப்பர் பந்து படத்தைப் பார்த்துவிட்டு அந்த படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படுவதாக தன்னிடம் கூறினார் என்று சுவாசிகா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இனி வரும் நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


