தனுஷ் – வெற்றிமாறனின் ‘வடசென்னை 2’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பிலும், இயக்கத்திலும் உருவாகி உள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும், போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. மேலும் நேற்று (செப்டம்பர் 14) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் தனுஷ், அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மேடையில், ‘வடசென்னை 2’ படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி அவர், “வடசென்னை 2 திரைப்படம் விரைவில் உருவாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் வெற்றிமாறன்- சிம்பு கூட்டணியிலான புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில் வெற்றிமாறன், வாடிவாசல் படத்தையும் இயக்குவதற்கு கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வெற்றிமாறன் அடுத்தது எந்த படத்தை கையில் எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


