பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது டாக்ஸிக், டியர் ஸ்டுடென்ட்ஸ், ராக்காயி, மண்ணாங்கட்டி போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதே சமயம் இவர், சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் அம்மனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவர் மீண்டும் அம்மனாக நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு, ரெஜினா ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. அந்த வகையில் நடிகை நயன்தாரா இப்படத்தில் அம்மனாகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.
Ishari Ganesh Recent
– Work is going on for 7 films in my production.
– Recently, we finished the first schedule of #VigneshRaja & #Dhanush’s film.
– #MookuthiAmman2 is almost complete.
– #VJSiddhu’s #Dayangaram shoot will begin next month.#D52pic.twitter.com/Jym2rL10OL— Movie Tamil (@_MovieTamil) September 26, 2025

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இப்படம் குறித்து புதிய தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது” என்று அப்டேட் கொடுத்துள்ளார். ஆகையினால் இனிவரும் நாட்களில் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர ஐசரி கணேஷ், தனுஷின் ‘D54’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது எனவும், விஜே சித்துவின் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.