பிரபல தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குறித்து பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் பல டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் ஜி.வி. பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பிளாக்மெயில் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை மு.மாறன் எழுதி, இயக்கியுள்ளார். ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஷாம்.சி.எஸ் இதன் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
கோகுல் பினாய் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இதில் ஜி.வி. பிரகாஷ் தவிர ஸ்ரீகாந்த், பிந்து மாதவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதன்படி படப்பிடிப்புகளும் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “ஜி.வி. பிரகாஷ் புது படத்திற்கு இசையமைக்க கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பார். ஆனால் நடிப்பதற்கு பணம் கூட வாங்காமல் நடிக்க தயாராக இருப்பார். அந்த அளவிற்கு அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகம். அதனால்தான் பல இயக்குனர்கள் அவரை விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
புது படத்துக்கு இசையமைக்க கோடிக்கணக்கில சம்பளம் கேட்பாரு…. ஆனால்…. ஜி.வி. பிரகாஷ் குறித்து பிரபல தயாரிப்பாளர்!
-
- Advertisement -