ஹரிஷ் கல்யாண் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் எல்ஜிஎம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் லப்பர் பந்து, டீசல், நூறு கோடி வானவில் போன்ற பல படங்களை ஹரிஷ் கல்யாண் கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் எனும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து எம். எஸ். பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு, ராம ராஜந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாம் சி எஸ் இதற்கு இசையமைத்துள்ளார். ஜூ ஜூ சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். கார் ஒன்றை பார்க்கிங் செய்வதனால் ஏற்படும் ஈகோ கிளாஸ் சம்பந்தமான கதைகளத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
Watched the Movie #Parking The story feels fresh and relevant to today’s time. Big shout out to @sinish_s for choosing this exciting content 🤗 Wishing the entire cast and crew of Parking a great success ahead 👍🏻#MSBaskar @iamharishkalyan @Actress_Indhuja @Sudhans2017…
— Anjali (@yoursanjali) November 30, 2023

இப்படம் (டிசம்பர் 1) இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சமூக வலைதளங்களில் இந்த படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை அஞ்சலி தனது சமூக வலைதள பக்கத்தில், “பார்க்கிங் திரைப்படத்தை பார்த்தேன். இன்றுள்ள காலகட்டத்தில் பொருத்தமானதாகவும், புதிதாகவும் இருக்கிறது. சிறப்பான கதை அம்சத்தை தேர்ந்தெடுத்துள்ளார்கள். பார்க்கிங் திரைப்படம் வெற்றி பெறுவதற்கு நடிகர்களுக்கும் ஒட்டுமொத்த படக்குழுவினர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்”
என்று பதிவிட்டுள்ளார்.சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்த எல் ஜி எம் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. எனவே இந்த பார்க்கிங் திரைப்படம் ஹரிஷ் கல்யாணுக்கு கம் பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.