spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினிக்கு வில்லனாக வருகிறார் ஹாலிவுட் நடிகர்!

ரஜினிக்கு வில்லனாக வருகிறார் ஹாலிவுட் நடிகர்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜெயிலர்.

இப்படத்தை  நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர், தளபதி விஜய் நடித்த பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்குகிறார்.

we-r-hiring

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் முதல் முறையாக இணைந்துள்ளதால் இப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா படமாக இப்படம் மிகப் பிரமாண்டமாகவும் அதிக  செலவிலும் தயாரிக்கப்படுகிறது.

இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, ரோபோ சங்கர், தமன்னா என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடிக்கிறார்கள்.

இப்படம் பான் இந்தியா படமாக தயாரிக்கப்படுவதால் இப்படத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில நடிகர்களும் இதில் கமிட்டா ஆகய் உள்ளனர்.

அதன்படி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் தெலுங்கு வில்லன் நடிகர் சுனில் ஆகியோர் கமிட்டாய் உள்ளனர்.

தற்பொது, ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவரை வில்லனாக களம் இறக்கி உள்ளார் இயக்குநர் நெல்சன்.

இவர் வேறு யாருமில்லை ஏற்கனவே விஜய்யின் பிகில் படத்தில் அறிமுகமான ஜாக்கி ஷராப்.

இவர் இந்த படத்தில் இணைந்ததன் மூலம் இப்படம் ஒரு பான் இந்தியா படம் என்பது உறுதியாகிறது.

சன் பிக்சர்ஸ் மிகப் பிரமாண்டமான முறையில் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்ப படத்தின் படப்பிடிப்பு சென்னை, கடலூர், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய பட குழுவினர் அடுத்ததாக ராஜஸ்தான் செல்ல உள்ளது.

மீண்டும் அங்கு படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் ராஜஸ்தான் செல்வதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

MUST READ