Homeசெய்திகள்சினிமாலியோ படத்தில் இணையும் புதிய நடிகர்!

லியோ படத்தில் இணையும் புதிய நடிகர்!

-

லியோ படத்தில் இப்பொழுது இன்னொரு பிரபலமும் இணைகிறார். சமூக வலைத்தளத்தில் திரும்பும் பக்கமெல்லாம் லியோ படத்தின் அப்டேட்கள்.

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் லீயோ.

லியோ படத்தில் இணையும் புதிய நடிகர்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் கிடைத்துள்ள படம் லியோ. விக்ரம் படத்தை விட பெரிய வெற்றி படமாக உருவாக்க லோகேஷ்  கடினமாக உழைத்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கதிர், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், பிக் பாஸ் ஜனனி என ஒரு மிக பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர்.

லியோ படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளிலிருந்து ரசிகர்களுக்கு லியோ படத்தின் புதிய புதிய அப்டேட்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளிவந்து ரசிகர்களின் ஆர்வத்தை படக்குழு ஈர்த்துவந்தது.

லியோ படத்தில் இணையும் புதிய நடிகர்!

அந்த வகையில் சமீபத்தில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் வேலை செய்த அனைவரையும் பாராட்டும் விதமாக ஒரு வீடியோ வெளியாகியது. காஷ்மீரில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தைப் பற்றிய இன்னொரு அப்டேட் வெளியாகியுள்ளது.

லியோ படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியலில் இப்பொழுது புதியதாக பிரபல நடிகர் பகத் பாசில் பெயரும் சொல்லப்படுகிறது. பகத் பாசில் லியோ திரைப்படத்தில் நடிப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

லியோ படத்தில் இணையும் புதிய நடிகர்!

இதைத் தொடர்ந்து லியோ படத்தை பற்றிய அடுத்த புதிய அப்டேட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ