தக் லைஃப் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் – சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க மணிரத்னம் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் திரிஷா, அசோக் செல்வன், நாசர் அபிராமி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் – கமல் காம்போவில் உருவாகியுள்ள இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி வருகின்ற ஜூன் 5ஆம் தேதி இப்படம் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அதிலும் திரிஷாவின் கேரக்டர் அனைவருக்கும் சப்ரைஸ் ஆக இருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஓ மாறா எனும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை பால் டப்பா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.