தனி ஒருவன் 2 படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி ஆகியோரின் நடிப்பில் தனி ஒருவன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மோகன் ராஜா இயக்கியிருந்தார். அதிரடியான, தரமான த்ரில்லர் படமாக அமைந்த இந்த படம் இன்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. அடுத்தது இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக நடிக்க போகிறார்? அவர் முதல் பாகத்தில் நடித்த அரவிந்த்சாமியின் கதாபாத்திரத்திற்கு ஈடு கொடுப்பாரா? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
இந்த நிலையில் தான் முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஆனால் அதைத் தொடர்ந்து இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. அதாவது இந்த படத்தின் பட்ஜெட் மிகப்பெரிய அளவில் இருப்பதன் காரணமாக இப்படம் தள்ளிப் போவதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த படம் குறித்த சில அப்டேட்களை பகிர்ந்துள்ளார்.
Archanakalpathi Recent
– #ThaniOruvan2 will be a bigger film than the first part.
– #RaviMohan & #Nayanthara are the other actors in this film.
We can expect ThaniOruvan2 at the right time.
pic.twitter.com/4VvR4lpWaY— Movie Tamil (@MovieTamil4) May 18, 2025

அதன்படி அவர், “தனி ஒருவன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரியது. ரவி, நயன்தாராவை தவிர நிறைய ஆர்டிஸ்ட்கள் நடிக்க இருக்கிறார்கள். இது ஒரு பயங்கரமான ஸ்கிரிப்ட். சரியான நேரத்தில் அதை கொண்டு வர முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


