Homeசெய்திகள்சினிமாவெற்றிகரமாக 50வது நாள்..... பிரபல திரையரங்கத்தில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' கொண்டாட்டம்!

வெற்றிகரமாக 50வது நாள்….. பிரபல திரையரங்கத்தில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ கொண்டாட்டம்!

-

- Advertisement -

வெற்றிகரமாக 50வது நாள்..... பிரபல திரையரங்கத்தில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' கொண்டாட்டம்!நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தியேட்டரில் வெளியான கார்த்திக் சுப்புராஜின் படம் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”. இதற்கு முன்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியானது. எனவே கார்த்திக் சுப்புராஜின் ரசிகர்கள் அப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியவில்லை என்று இயக்கத்தில் இருந்தனர். இந்நிலையில்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், 2023 நவம்பர் 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தில் முன்னணி கதாபாத்திரங்களாக ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு ஆகியோர் நடித்திருந்தனர். தேவையான இடங்களில் பக்காவாக பொருந்திப் போன ஜிகர்தண்டா பார்ட் 1 படத்தின் கனெக்ட், அட்டகாசமான இன்டர்வெல் ப்ளாக், யாராலும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் என ஒரு தரமான விமர்சனத்தைப் பெற்று படம் திரையரங்குகளில் ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற்றது. குறிப்பாக காடுகளின் ஆதாரமாக விளங்கும் யானைகளைப் பற்றிய சில காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதேபோல் யானையையும் சினிமாவையும் ஒப்பிட்ட ஒரு திரைக்கதை புதுமையான அனுபவத்தை கொடுத்தது. இவை அனைத்திற்கும் உயிர் கொடுத்து கச்சிதமாக நடித்திருந்தனர் எஸ்.ஜே.சூர்யாவும், ராகவா லாரன்சும். ஹாலிவுட் கௌபாய் பட ஸ்டைலில் பின்னணி இசையில் மிரட்டி இருந்தார் சந்தோஷ் நாராயணன். இவை அனைத்துமே படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வெற்றிப் படமாக அமைந்தது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.வெற்றிகரமாக 50வது நாள்..... பிரபல திரையரங்கத்தில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' கொண்டாட்டம்! இந்நிலையில் படம் வெளியாகி 50 நாட்கள் ஆகியிருப்பதை படக்குழுவினர் ரசிகர்களுடன் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று (07 ஜனவரி 2024) சென்னை வடபழனியில் உள்ள கமலா சினிமாஸ் திரையரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஒரு டிக்கெட்டின் விலை ரூ.99 என்று நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இரவு 7:45 மணிக்கு கொண்டாட்டம் தொடங்கப்பட உள்ளது. முக்கிய விருந்தினராக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதற்கான டிக்கெட் விற்பனைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

MUST READ