டாப் நடிகர் ஒருவர் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனரிடம் கதை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். பொருளாதார கஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களைத் தாண்டி புதிய வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது என்பதை நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் கொடுத்திருந்தார் அபிஷன். இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. கோடை விடுமுறை என்பதால் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவும், வசூலும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ரஜினி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சிம்பு – தனுஷ் ஆகிய இருவரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துவிட்டு இயக்குனரை அழைத்து பாராட்டியுள்ளனராம். அப்போது நடிகர் தனுஷ், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்திடம், அதை ஏதேனும் இருக்கிறதா என்று கேட்க அவர் தனுஷிடம் ஒரு வரி கதையை சொன்னாராம். அது தனுஷுக்கு பிடித்து விட்டதால் முழு கதையை விரிவுபடுத்தி கொண்டு வருமாறு கேட்டுள்ளாராம். இந்த தகவல் எதிர்காலத்தில் தனுஷ் – அபிஷன் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


