சூர்யா நடிப்பில் தற்போது ரெட்ரோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் நிலையில் 2D நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து, படமானது 2025 மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தான் இன்று (ஏப்ரல் 18) இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கும்போது இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது. அதே சமயம் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை வேற லெவல். மேலும் இப்படத்தில் கார்த்திக் சுப்பராஜ், சூர்யாவை வித்தியாசமாக காட்டியிருப்பார் என நம்பப்படுகிறது. மொத்தத்தில் இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
glimpse of #LoveDetox ..🔥🔥🔥🤺#RetroTrailer | #RetroAudioLaunch | #Suriya pic.twitter.com/dUVZNzn6LW
— ᴅᴏɴᴛ__ᴍᴇꜱꜱ_ᴡɪᴛʜ__ᴍᴇุุุุุุุุุุุุุุุุุุุุุุุุุุุุุุุ (@NoOneLxves_Me) April 18, 2025
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி ரெட்ரோ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Love Detox’ எனும் பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இந்த பாடலுக்கு தான் நடிகை ஸ்ரேயா சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலின் சில காட்சிகள் ட்ரெய்லரிலும் காட்டப்பட்டிருந்தன. இனிவரும் நாட்களில் இப்பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.