Homeசெய்திகள்சினிமாஆதி - லட்சுமி மேனன் கூட்டணியில் சப்தம்... வெளியீடு குறித்த தகவல்...

ஆதி – லட்சுமி மேனன் கூட்டணியில் சப்தம்… வெளியீடு குறித்த தகவல்…

-

- Advertisement -
kadalkanni
2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஈரம். இப்படத்தில் ஆதி, ரம்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஈரம் பட கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்தது. இதற்கு சப்தம் என தலைப்பு வைக்கப்பட்டது. இதில் ஆதியுடன் இணைந்து சிம்ரன், லைலா, லட்சுமிமேனன், அபிநயா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 7 ஜி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தமன் படத்திற்கு இசை அமைக்கிறார்.

சப்தம் திரைப்படமானது ஈரம் படத்தைப் போல ஹாரர் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ளது. படத்தின் டைட்டில் லுக் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, மூணாறு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதையடுத்து படத்தின் டப்பிங் பணிகளும், பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

சப்தம் படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சப்தம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

MUST READ