ஆடுஜீவிதம் திரைப்படம் ஓடிடி ரிலீஸ் என்ன ஆனது?… படக்குழுவின் விளக்கம்…
- Advertisement -

மோலிவுட் திரையுலகின் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். நடிகராக மட்டுமன்றி வில்லன் கதாபாத்திரங்களில் பிருத்விராஜ் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். முதலில் மலையாளப் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்த அவர் அடுத்து தெலுங்கு படமான சலார் திரைப்படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக நடித்தார். இதில், பிருத்வியின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதனிடையே நடிப்பை தவிர இயக்கத்திலும் பிருத்விராஜ் ஆர்வம் காட்டி வருகிறார். மோகன்லாலை வைத்து லூசிபர் 2 படத்தை இயக்கி வருகிறார்.

பிருத்விராஜ் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம். அரபு நாட்டுக்கு வேலை செல்லும் கதாநாயகன் அங்கு ஆடு மேய்க்க விடப்பட்டு பாலைவனத்தில் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை. பிரபல எழுத்தாளர் பென் யாமின் எழுதிய நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ப்ளஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.

இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லையாம். இதற்கு விளக்கம் அளித்த படக்குழு, இத்திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப இருப்பதால், பெரிய ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.