Homeசெய்திகள்சினிமாஅதிநவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் ஓடிடி-க்கு வரும் ஆளவந்தான்

அதிநவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் ஓடிடி-க்கு வரும் ஆளவந்தான்

-

- Advertisement -
2001ம் ஆண்டு கமல் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ் மட்டுமன்றி இந்தியிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கமலின் மாறுபட்ட நடிப்பில் வெளியான இத்திரைப்படம் தற்போது வரை பேசப்படுகிறது.

இதனிடையே, ஆளவந்தான் திரைப்படம் சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு மறு வெளியீடு செய்யப்பட்டது. படத்தின் முன்னோட்டமும் வெளியானது. இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் மறு வெளீயீடு செய்யப்பட்டது. இந்நிலையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டுள்ள ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. பிரைம் தளத்தில் வெளியாகிறது.

கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 AD திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்திலும் நடிக்கிறார்.

MUST READ