சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது தவிர நடிகை பூஜா ஹெக்டே ஸ்பெஷல் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் ஆமிர்கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் நடிகர் ரஜினி, தற்போது ஜெயிலர் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரஜினி, நெல்சன், அனிருத் காம்போவில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி அட்டப்பாடியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தது கோழிக்கோடு பகுதியில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் மோகன்லால் – சிவராஜ்குமார் மட்டுமல்லாமல் பாலைய்யாவும் பவர்ஃபுல்லான கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என பல தகவல்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை இருப்பினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
- Advertisement -