Homeசெய்திகள்சினிமாஅது தவறு என தெரிந்தும் செய்தேன்.... அமீர்கான் ஓபன் டாக்!

அது தவறு என தெரிந்தும் செய்தேன்…. அமீர்கான் ஓபன் டாக்!

-

- Advertisement -

நடிகர் அமீர்கான் அது தவறு எனக்கு தெரிந்தும் செய்ததாக தன்னுடைய தீய பழக்கங்கள் குறித்து பேசியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அமீர் கான். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.அது தவறு என தெரிந்தும் செய்தேன்.... அமீர்கான் ஓபன் டாக்! இவர் தற்போது சித்தாரே ஜமீன் பர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ஆர்.எஸ். பிரசன்னா இயக்கி வருகிறார். அதேசமயம் மறைந்த இசையமைப்பாளர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு படத்திலும் ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்தது இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இதற்கிடையில் இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே ரஜினியுடன் இணைந்து அமீர் கானை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு திரைத்துறையில் பிஸியாக பணியாற்றி வரும் அமீர்கான் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தன்னுடைய தீய பழக்கங்கள் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.அது தவறு என தெரிந்தும் செய்தேன்.... அமீர்கான் ஓபன் டாக்! அதன்படி அவர் கூறியதாவது, “ஒரு காலத்தில் நான் அதிகமாக குடிப்பேன். அத்துடன் எனக்கு புகைப்பழக்கமும் இருந்தது. இரவு முழுவதும் குடிப்பேன். அந்த சமயத்தில் நான் தவறு செய்கிறேன் என்று எனக்குத் தெரிந்தும் என்னால் அதை நிறுத்த முடியவில்லை. ஆனால் இப்போது நான் குடிப்பதை விட்டு விட்டேன்” என்று தெரிவித்துள்ளார். அமீர்கான் இவ்வாறு மனம் திறந்து பேசி இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

MUST READ