spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅவர் மீது நடவடிக்கை எடுங்க.... ஆர்த்தி ரவியின் தந்தை போலீஸில் புகார்!

அவர் மீது நடவடிக்கை எடுங்க…. ஆர்த்தி ரவியின் தந்தை போலீஸில் புகார்!

-

- Advertisement -

நடிகர் ரவி – ஆர்த்தி தொடர்பான விவகாரம் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் ஆர்த்தியில் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.அவர் மீது நடவடிக்கை எடுங்க.... ஆர்த்தி ரவியின் தந்தை போலீஸில் புகார்!

அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு ரவி – ஆர்த்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் ரவி, ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்தார். அதன் பின்னர் இவர்களின் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் ஐசரி கணேஷ் வீட்டு திருமண நிகழ்வில் நடிகர் ரவி, பாடகி கெனிஷாவுடன் கைகோர்த்து வந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பரபரப்பாகவும் பேசப்பட்டது. இதன் பின்னர் ரவி ,ஆர்த்தி, ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் ஆகியோர் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.அவர் மீது நடவடிக்கை எடுங்க.... ஆர்த்தி ரவியின் தந்தை போலீஸில் புகார்! இதற்கிடையில் ஆர்த்தி குறித்து, பாடகி சுசித்ரா மோசமாக பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. எனவேதான் தனது மகள் ஆர்த்தி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதற்காக பாடகி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ